தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருப்ப மனு நேர்காணலை தொடங்கியது திமுக! - விடுதலைச் சிறுத்தைகள்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தொடங்கியது.

விருப்ப மனு நேர்காணலை தொடங்கியது திமுக
விருப்ப மனு நேர்காணலை தொடங்கியது திமுக

By

Published : Mar 2, 2021, 11:21 AM IST

Updated : Mar 2, 2021, 12:41 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்களுக்கு இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு, ராமநாதபுரம், விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நடைபெறுகிறது.
திமுக சார்பாக 8388 விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 7967 நபர்கள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்துள்ளனர். மேலும் மாவட்டம் வாரியாக இன்று முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் மேற்கொள்வார்கள்.
வேட்பாளர்களிடம் தொகுதி நிலவரம், தேர்தல் செலவு குறித்து கேட்டு அறியப்படும், தொகுதியில் வேட்பாளரின் செல்வாக்கு, கட்சிப் பணிகளில் ஈடுபாடு, வெற்றிவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.

இந்நிலையில் நேற்று (மார்ச்1) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக சார்பாக முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இன்றைய தினம் (மார்ச்2) இவ்விரு கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றன. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ள நிலையில், நாளைய தினம் (மார்ச்3) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.

இதையும் படிங்க:திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது: திருமாவளவன்

Last Updated : Mar 2, 2021, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details