தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கமல், ரஜினியை சமாளிக்க திமுகவிற்கு தெம்பு உள்ளது' - கே.என்.நேரு

சென்னை: கடந்த காலங்களில் மும்முனை போட்டி ஏற்பட்டபோது திமுகவிற்கு சாதகமாக இருந்தது, அப்படியே இப்பொழுதும் இருக்கும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை
சென்னை

By

Published : Dec 20, 2020, 8:26 PM IST

திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தைத் தொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கு மேல் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையை மேற்கொள்வார். கிராம பஞ்சாயத்து மூலம் அதிமுக ஆட்சிக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை மக்களிடம் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

'மிஷன் 200' என்பது திமுக கூட்டணியை உள்ளடக்கியது. கூட்டணி யாருடன், யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்த விவரங்களை தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, சீமான் தனித்து போட்டியிட்டு வருகிறார், கமல் கட்சி ஆரம்பிக்காத ரஜினியிடம் கூட்டணி என்கிறார். கமல், ரஜினி என எல்லாரையும் சமாளிக்க திமுகவிற்கு தெம்பு உள்ளது. அதனால்தான் மக்களிடம் செல்கின்றோம். 1977இல் நான்கு முனை போட்டி இருந்தது, அப்போது 55 இடங்கள் திமுக வெற்றி பெற்றது. மும்முனை போட்டி ஏற்பட்டால் திமுகவிற்கு சாதகம் அதுவே வரலாறு.

ரஜினி வருகையால் திமுகவிற்கு பாதிப்பு இருக்காது. நடிகரை எதிர்த்து பரப்புரை செய்ய நடிகர்கள் திமுகவிற்கு வர வாய்ப்புள்ளது” என்றார்.

இதையும் படிங்க: தூக்கி குப்பையில் போடுங்கள்! - துரைமுருகன் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details