தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எதுவும் பட்ஜெட்டில் இல்லை’ - கனிமொழி

சென்னை: வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தப் புதிய திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்று கனிமொழி எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி
செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி

By

Published : Feb 1, 2020, 11:55 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பிகூறுகையில், “சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சரி செய்வதற்கான எந்த வழிவகையும் இல்லாமல் உள்ளது தற்போது அறிவித்துள்ள பட்ஜெட். நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

தனிநபரின் வரி குறைக்கப்படும் என ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். உண்மையாக அது பல குழப்பங்களை உருவாக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். இதனால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது.

பொருளாதார பிரச்னைக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் தெளிவாக பதில் கூறவில்லை. விவசாயிகளுக்கு இருக்கின்ற கடன் பிரச்னையைக் குறைக்க இந்த பட்ஜெட் எந்த வகையிலும் உதவி செய்யாது. விவசாயிகளுக்கும் வேலைவாய்ப்பு பற்றியும் தெளிவான பதில் கூறவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி

இதையும் படிங்க: சாதாரண மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத பட்ஜெட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ABOUT THE AUTHOR

...view details