சென்னை:பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன், புரெவி, நிவர் புயலையொட்டி குடிசைவாழ் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்ட திட்டத்திற்காக 312 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ள நிலையில், இந்ததிட்டம் முறையாக மக்களை சென்றடைந்ததா? எந்த முறையில் டெண்டர் விடப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார்.
'ஆலமரம் போல் திமுக உள்ளது; எந்தப் பிரச்னையும் இல்லை'- தமிழச்சி தங்கப்பாண்டியன் மேலும், கனமழையால் சேதமடைந்த சாலைகளை சரிசெய்யவும், செம்மஞ்சேரி, தாம்பாரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.
பள்ளிக்கரணை சதுப்புநிலம்
செம்மஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் அமைக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த தமிழச்சி தங்கப்பாண்டியன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்து பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார். மேலும், வருகின்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறும் எனக்கூறிய அவர், பல பிரச்னைகளைச் சந்தித்து திமுக ஆலமரம்போல் இருப்பதாகவும், யார் கட்சியில் சேர்ந்தாலும், கட்சியைவிட்டுச் சென்றாலும் எந்தப் பிரச்னையும் திமுகவுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'கலை, இலக்கியத்தை அதிகாரத்தால் நசுக்க வேண்டாம்' - தமிழச்சி தங்கபாண்டியன்