தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நாமம் போடுவர் - ஜெயக்குமார் - அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நாமம் போடுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Dec 2, 2019, 4:42 PM IST

Updated : Dec 2, 2019, 5:09 PM IST

சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், "தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் உள்ளாட்சித் தேர்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் செயல்படுத்த முடியும். இதனைக் கருத்தில் கொண்டே 2016ஆம் ஆண்டு தேர்தல் நடத்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது.

அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக தான். உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டபோதும், அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தொகுதி மறுவரையறை தெளிவாக இருக்கிறது என்றும் நீதிமன்றம் கூறிய பின்னரும் ஸ்டாலின் கேள்வி எழுப்புவது சரியில்லை.

திமுக கொடுத்த தொல்லைகளை தாண்டி தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு நேர்மையான அலுவலராக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இருக்கிறார். அவர் சுதந்திரமாக செயல்பட்டே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது, உட்கட்சி பூசலால் திமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ள பயப்படுகிறது. இந்திய அளவில் கட்டம் கட்டமாகத்தான் தேர்தல் நடக்கிறது, அதை ஏன் என்று கேட்க முடியுமா? இப்போது மட்டும் கேட்பது ஏன்? தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

திமுகவிற்கு மக்கள் ஆதரவு இல்லை. நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவின் வெற்றியைக் கண்டு அவர்கள் பயந்து விட்டனர். இருந்தபோதும் உறுதியான வெற்றியை நாங்கள் ஜனநாயக ரீதியில் பெறுவோம்" என்றார்.

மேலும், மக்களும் திமுகவும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூச உள்ளதாக ஸ்டாலின் கூறியதற்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார், ஏற்கனவே அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டு விட்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் முடிவில் அவர்களுக்கு மக்கள் நாமம் போடுவார்கள் என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி

Last Updated : Dec 2, 2019, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details