தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக உட்கட்சி தேர்தல் ; அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் - அண்ணா அறிவாலயம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி; அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி; அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல்

By

Published : Sep 23, 2022, 7:27 AM IST

சென்னை: திமுக 15 வது உட்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் உள்ள மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்மனு தாக்கல் நேற்று துவங்கியது.

முதல் நாளான நேற்று தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், துணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கீதா ஜீவனும் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்புமனுக்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும் ஒரு சில நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும் - தமிழ்நாடு காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details