வரும் 23 இல் திமுக உயர்நிலை திட்டக் குழுக்கூட்டம்! - High level meet
13:02 November 16
சென்னை:திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்," திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.