தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - தென் பெண்ணையாற்றின் குறுக்கே அணை

சென்னை: தமிழக உரிமையை பாதிக்கும் தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்தாத தமிழ்நாடு அரசை கண்டித்து "கண்டன ஆர்ப்பாட்டம்"  நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

DMK held Protest Thenpennai river cross dam

By

Published : Nov 18, 2019, 5:37 PM IST

Updated : Nov 18, 2019, 5:42 PM IST

அதிமுக அரசை கண்டித்து திமுக கண்டன ஆரப்பாட்டம் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "தென் பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அணை உள்ளிட்ட ஐந்து திட்டப் பணிகளுக்கு தடை விதிப்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையிலும், பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் எட்டப்பாடி பழனிசாமி பதில் செல்லாமல் இருப்பது ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்னைகளில் கண்டுகொள்ளாத போக்கு இருப்பதையே காட்டுகிறது" என்று விமர்சித்துள்ளது.

மேலும், இதனை கண்டித்து திமுக சார்பில் வருகின்ற வியாழக்கிழமை (21.11.2019) அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க : 'முரசொலி இடத்தை திமுக திருப்பிக்கொடுத்தால், பாஜக ரூ. 5 கோடி தர தயார்' - பொன்.ராதாகிருஷ்ணன்

Last Updated : Nov 18, 2019, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details