தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு அருகதை கிடையாது- முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஆவேசம் - etv bharat tamil

ADMK former minister C.V. Shanmugam: தமிழர்களுக்கு துரோகத்தை செய்துவிட்டு நீட்டை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டி
முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டி

By

Published : Aug 19, 2023, 7:46 PM IST

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டி

சென்னை : அதிமுகவின் பொன்விழா மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்,

நீட் தேர்வு, 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. இப்போது நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறி மாணவர்களின் இறப்பில் அரசியல் ஆதாயம் தேடுகின்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.மகனுக்கு அரசியல் களம் அமைத்துக் கொடுப்பதற்காகவே இந்த நீட் நாடகத்தை திட்டமிட்டு செயல்படுத்து கிறார்கள்.

2012ஆம் ஆண்டில் நீட் தேர்வு செல்லாது என உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மேல் முறையீடு செய்து நீட் செல்லும் என கூறியது இதே திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தான். திமுக அரசிற்கு நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஏனென்றால் அதை கொண்டு வந்ததே திமுக அரசாங்கம் தான்.அதனால்தான் சிவில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள். சிபில் வழக்கு என்றாலே பல ஆண்டுகள் இழுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. மத்திய அரசாங்கத்தின் மீதும் அதிமுக மீதும் குறை சொல்வதற்கு ஏதாவது வேண்டும் என்பதற்காக, மாணவ மாணவர்களின் உயிர்கள் மீது விளையாடிக் கொண்டிருக்கிறது.

உதயநிதி உண்ணாவிரத போராட்டம் என்று கூறுகிறார். எல்லாம் உங்கள் தாத்தாவை பார்த்தாச்சு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒரு இயக்கம் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான். காவேரி நிதி நீர் பிரச்சினைக்காக விவசாயிகள் போட்ட வழக்கை திரும்ப பெற்றது கருணாநிதி. இன்று ராமநாதபுரத்தில் பேசும் ஸ்டாலின் அந்த கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது அன்று முதலமைச்சராக இருந்தது கருணாநிதி.

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என கருணாநிதி கூறிய பிறகு தான் பதுங்கிக் குழியிலிருந்து தமிழர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள் அதன் பிறகு தான் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். தமிழர்களுக்கு துரோகத்தை செய்துவிட்டு நீட்டை பற்றி பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த அருகதையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வை பொறுத்தவரை மாணவர்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட மாணவன் அதை தொடர்ந்து அவர் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான நிலை ஏற்பட்டது இதற்கு பொறுப்பேற்று இருக்க வேண்டிய முதலமைச்சர் இதற்கு தீர்வு காண வேண்டிய ஸ்டாலின் அவர்கள் அந்த இறப்பை அரசியல் ஆதாயத்தை தேடுவதற்காக மீண்டும் மீண்டும் சொன்னதையே இப்போதும் சொல்கிறார். நாங்கள் நீட்டை ரத்து செய்வோம் என்று சொன்ன உதயநிதி தலைமையில் நாளை 20ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

ஆட்சியில் இருப்பது திமுக தான் தேர்தலில் வாக்குறுதி அளித்து திமுக ஊரெல்லாம் சென்று நீட் ரத்து செய்யும் ரகசியத்தை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று கூறிக்கொண்டு. அதைப் பற்றி சிறிதும் வெட்கப்படாமல் இரண்டரை ஆண்டு காலம் அக்கறை இல்லாத முதலமைச்சருக்கு இப்போது அக்கறை வந்திருக்கிறது இதற்கான காரணம் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் உணர்வுகளை தூண்டி, மக்களை ஏமாற்றி மாணவ சமுதாயத்தை மாற்றி மீண்டும் சட்டமன்ற தேர்தலில் சொன்னது போல நாடாளுமன்றத்திலும் ஏமாற்றி வாக்குகளை பெறலாம் என திட்டமிட்டு தன்னுடைய மகனின் அரசியல் ஆதாயத்திற்காக மாணவ மாணவிகளை பலி கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய முதலமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க :ரஜினி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் - இந்திய அளவில் ஸ்பாட்டிஃபை செயலியில் முதலிடம் பிடித்த ரஜினி பாடல்!

ABOUT THE AUTHOR

...view details