தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆளுநரை வைத்து பிரிவினையை ஏற்படுத்த திமுக அரசு முயற்சி" - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு! - நம்ம ஊரு மோடி பொங்கல்

தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்து பிரிவினையை ஏற்படுத்த திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

CHE
CHE

By

Published : Jan 14, 2023, 8:56 PM IST

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜகவின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, "தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் இந்து அடையாளங்கள் அழிக்கப்படுகிறது. அதற்கான முயற்சிகளில் திராவிட கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக உள்ளூர் மக்களை இணைத்து 1,230 இடங்களில் 'நம்ம ஊரு மோடி பொங்கல்' கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபாரத காலத்தில் இருந்து ஏறு தழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு என்பதும், வாடிவாசல் என்பதும் இப்போது வந்தது. பொங்கல் விழா இந்து மக்களின் அடையாள விழா. தமிழக அரசு அதனை அழிக்க நினைக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டி என்பது இந்து மக்கள் கலாச்சாரத்தின் பண்பாட்டின் அம்சம்.

இந்நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு காளைகளின் மீது சந்தனம் வைக்க கூடாது, குங்குமம் வைக்க கூடாது என பண்பாடுகளை சிதைக்க கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. எந்த பயலுக்கும் ராஸ்கலுக்கும் இதனை சொல்வதற்கு தகுதி கிடையாது. பண்பாட்டில் தலையிட உரிமை கிடையாது. அதனை மீறி செல்பவர்கள் மீது மாட்டை அவிழ்த்து விட வேண்டும்.

அரசு அதிகாரிகள் இந்து பண்டிகைகளில் தலையிடுவது போல் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் பண்டிகைகளில் தலையிடுவது உண்டா? ஜல்லிக்கட்டு மாட்டுக்கு சந்தனம் குங்குமம் வைக்க கூடாது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ராமர் கற்பனை பாத்திரம் என்று சட்ட சபையில் கூறியவன் யார்? ராமரை விமர்சித்து பேசியவர்கள் இழிபிறவிகள்.

ராமர் பாலம் என்பது நம்பிக்கை. ஹிந்து மக்கள் அதனை அழிக்க ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்ட சபையில் ராமரை விமர்சனம் செய்தது தவறு. அவர்களை பேச அனுமதித்த சபாநாயகர் அப்பாவு ராஜினாமா செய்ய வேண்டும். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற 6 திட்டங்கள் உள்ளது. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்தலாம். சேது சமுத்திர திட்டம் இன்றைய கால கட்டத்தில் பொருளாதரீதியாக சாத்தியம் இல்லை.

திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆளுநருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அவரை கைது செய்யவேண்டும். ஆளுநரை வீடு போய் சேர மாட்டார் என மிரட்டி இருக்கிறார். ஆளுநரை வைத்து பிரிவினையை ஏற்படுத்த திமுக அரசு முயற்சிக்கிறது. தமிழகத்தில் பிரிவினை வாதம் தலைவிரித்து ஆடுகிறது. முதல்வரை கொம்பு சீவி விடுகிறார்கள். திராவிடம் என்பது மண்ணை குறிக்கும், இனத்தை குறிக்காது" என்று கூறினார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக ஜன.27 முதல் நடைபயணம் - காயத்ரி ரகுராம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details