சென்னை: பெண்களுக்குப் பாதுகாப்புத் தரக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக , காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ’பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டார். பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி இருக்கிறது இந்த அரசு என்றும்; காவல் உதவி செயலியை பெண்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இந்த ஆட்சி பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஆட்சி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொழும்பில் கலவரம் வெடித்த நிலையில் ஊரடங்கு அமல்!