சென்னை:திமுகதான் தங்களுடைய ஒரே எதிரி என்றும், அவர்களை அழிப்பதுதான் தங்களது வேலை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " அதிமுகவை விமர்சிக்க திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை. ஓட்டை சைக்கிளில் போனவர் தற்போது விலை உயர்ந்த காரில் சென்று கொண்டிருக்கிறார். அதை அவர் உழைத்து சம்பாதித்தாரா? என்பது கேள்விக்குறிதான் தகுதி இல்லாதவர்களுடன் விவாதம் செய்ய நான் தயாராக இல்லை.
நான் கோமாளியா அல்லது திமுகவினர் கோமாளியா என்பது சட்டபேரவைத் தேர்தலில் தெரிய வரும். திமுக ஒரு தருதலைக் கட்சி. அதிமுக ஆன்மிக கட்சி. முரசொலியில் எப்பொழும் அதிமுக தலைவர்களை அவமதித்து தான் எழுதுவார்கள். திமுக எந்த ஆயுதத்தை கையில் எடுக்கிறார்களோ அதையே நாங்களும் கையில் எடுப்போம். நாங்கள் பேசுவதில் உண்மை இருக்கிறது. எனவே அதனை உரக்கச் சொல்கிறோம்.