திமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் தமிழ்நாடு தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலில் அதிக பாதுகாப்பு அளிக்க வேண்டும். பதற்றமான இடங்களில் மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - திமுக - திமுக வழக்கறஞர் கிரிராஜன்
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளின் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
girirajan
தொடர்ந்து பேசுகையில், வாக்குச்சாவடிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதால், கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர்களும் அதனை கண்காணிக்க உரிய வகையில் அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
அதிமுகவினர் பணம் விநியோகம் செய்வதை மறைத்துவிட்டு, திமுக மீது வீண் பழி சுமத்துகின்றனர் என்று தெரிவித்தார்.