சென்னை:திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாஜகவின் பக்கம் சென்ற கு.க.செல்வத்திற்கு அங்கு முக்கியத்துவம் வழங்கப்படாததால் மீண்டும் திமுகவின் பக்கம் வந்தார்.
தற்போது திமுகவில் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள இவர் உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.