தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் முதல் பரப்புரையை தொடங்கிய திமுக! - திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியில் இன்று தொடங்கியது.

dmk mla krishnasamy
dmk mla krishnasamy

By

Published : Dec 18, 2019, 1:29 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் நெமிலிச்சேரியில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தேசிங்கு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கே.சுரேஷ் குமார், நெமிலிச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்ச்செல்வி, ஆகியோரை ஆதரித்து பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.

சென்னையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுகவினர்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி, "தமிழ்நாட்டில் முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி நல்லாட்சி செய்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் அதிமுக அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கிராமங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர் ஒன்றியக் குழு உறுப்பினர் மாவட்டக் குழு உறுப்பினர் ஒன்றிய சேர்மன் போன்ற பதவிகளை அநேகமாக அதிக இடங்களில் திமுக தான் கைப்பற்றும். முதன்முதலாக வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கியுள்ளோம். மூன்று ஆண்டுகாலம் உள்ளாட்சியில் ஊழல் செய்த அரசுக்கு எதிராக திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் உள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: கோவையில் குழந்தைகளை விற்கும் கும்பல் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details