தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர்கள் மீது இரண்டாம் கட்ட புகார் அளித்த திமுக!

சென்னை: அதிமுகவின் ஐந்து அமைச்சர்கள் உள்பட ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மீது திமுகவினர் இரண்டாம் கட்ட ஊழல் புகாரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் கொடுத்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்
செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்

By

Published : Feb 20, 2021, 9:58 AM IST

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநரைச் சந்தித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உள்பட அதிமுகவின் ஐந்து அமைச்சர்களான கே.சி. கருப்பணன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமனி, அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். ராஜாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஊழல் புகார் கொடுத்தார்.

அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், “அதிமுகவின் ஐந்து அமைச்சர்கள், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மீது இரண்டாம் கட்ட ஊழல் புகார் கொடுத்துள்ளோம்.

ஆளுநர் அவரது அதிகாரத்திற்குள்பட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதிமுக அமைச்சர்கள் மீது மூன்றாம் கட்ட ஊழல் புகார் கொடுக்க அவசியம் வராது, காரணம் அதுவரை அவர்கள் ஆட்சியில் இருக்க மாட்டார்கள்.

செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்

தேர்தல் நேரம் என்பதால் புகார்கள் கொடுக்கவில்லை. எப்போதெல்லாம் புகார் பட்டியில் கிடைக்கின்றதோ அப்போது எல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ளோம், நீதிமன்றம் சென்றுள்ளோம்.

எங்கும் பயன் இல்லை என்பதால் ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்குத்தான் அதிகாரம் உண்டு” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காரமடையில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கலந்துரையாடல்

ABOUT THE AUTHOR

...view details