தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தபால் வாக்குப் பதிவு செய்யும் சட்டப்பிரிவை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு! - undefined

சென்னை: 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு செய்ய வகை செய்யும் சட்டப்பிரிவை எதிர்த்து, திமுக தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ஆ ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 4, 2021, 10:24 PM IST

தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பு படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில, மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை, ஆயுதப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக, தபாலில் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தவரிசையில், 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தபால் வாக்குப் பதிவு செய்யும் வகையில், தேர்தல் ஆணையம், சட்டத்திருத்தம் கொண்டு வந்து அறிவித்தது. தபால் வாக்கைப் பெறுவதற்காக வாக்குச்சாவடி அலுவலர் தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அரசுக்கு பொருளாதார சுமை அதிகரிக்கும் எனவும், 80 வயதுக்கு மேலானவர்களை சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பிலும், மாற்றுத் திறனாளிகள் சங்கம், துரை என்பவர் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், இப்புதிய நடைமுறை கள்ள ஓட்டுக்கு வழி வகுக்கும் எனவும், தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இம்மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(பிப்.4) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் இடைக்கால பதில்மனு தாக்கல் செய்துள்ளதாகவும், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பிலும் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், சட்டப்பிரிவையே எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறலாம் என்பதால், திமுக தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென கோரினார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திமுக தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details