கரோனா ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியனர் உள்ளிட்டோர் உணவு வழங்க தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் வழங்கப்பட்டுவருகிறது. முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் இந்தப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.