தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக நிர்வாகியின் மகன் கொலை வழக்கு; சிறையில் இருக்கும் ரவுடிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் அம்பலம்! - murder news update

DMK Executive son murder case: சென்னை திருவொற்றியூரில் திமுக நிர்வாகியின் மகன் காமராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறையில் இருக்கும் பிரபல ரவுடிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட காமராஜ்
கொலை செய்யப்பட்ட காமராஜ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 11:45 AM IST

சென்னை: விவேகானந்தர் என்பவர், திருவொற்றியூர் விம்கோ நகரின் திமுக நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் காமராஜ் என்பவர், அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல் காமராஜ், அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அவரது அலுவலகத்திற்கு திடீரென நுழைந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், காமராஜை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை: இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எண்ணூர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது காமராஜின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், காமராஜின் தொலைபேசியை ஆய்வு மேற்கொண்டதில், சில நபர்கள் தொடர்ந்து அவரிடம் மாமுல் கேட்டு மிரட்டி வந்தது தெரிய வந்துள்ளது. புழல் சிறையில் இருக்கும் வட சென்னையின் பிரபல ரவுடி ஒருவர், இந்த கொலையின் பின்னணியில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், சிறையில் இருக்கும் ரவுடியின் சகோதரர் ஒருவர் தொடர்ந்து காமராஜை மிரட்டி, மாதம் 10 ஆயிரம் ரூபாய் மாமுல் கொடுக்க வேண்டும் என கேட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், காமராஜ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர், ரவுடிகளுக்கு உதவி வந்ததாகவும் போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இது குறித்தான செல்போன் உரையாடல் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், ரவுடியின் சகோதரர் மற்றும் காமராஜ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், காமராஜ் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதனை சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அம்பத்தூரில் போலீசாரை அடிக்க துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு.. 5 வடமாநில தொழிலாளர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details