திமுக தலைவர் ஸ்டாலின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமான மாணவர்களுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பணி ஆணையை வழங்கினார். இதில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் ம. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாளில் எந்தக் கொண்டாட்டமும் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நாம் மக்கள் பணி செய்துவருகிறோம். வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டிய ஆளும் கட்சியின் பணிகளை எதிர்க்கட்சியான நாம் செய்துவருகிறோம். மக்களுக்கான அரசு என்றால் அது திமுக அரசு தான். அதன் ஆட்சி விரைவில் அமையப்போவது உறுதி.