தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்.14இல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்! - Coordinator DR Balu Announcement

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் வருகின்ற அக்.14ஆம் தேதி நடைபெறும் என டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.

dmk
dmk

By

Published : Oct 12, 2020, 2:15 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

முன்னதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்தல் அறிக்கை தயாரிக்க டி.ஆர். பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு உறுப்பினர்களின் பெயரை வெளியிட்டார்.

இந்தக் குழுவில், பொருளாளர் டி.ஆர். பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப. செல்வராஜ், மக்களவை திமுக குழு தலைவர் கனிமொழி, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் குறித்த அறிவிப்பை குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு வெளயிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்

இதில், "சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகின்ற 14ஆம் தேதி காலை 9 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:'தாழங்குடாவில் ரூ.13.06 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புப் பணி, மீன் இறங்கு தளம்!'

ABOUT THE AUTHOR

...view details