தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக அமைச்சரைப் பீடித்திருக்கும் அவதூறு பரப்பும் நோய் - துரைமுருகன் சாடல் - கொடூர தமாஷ் பேர்வழிகளாக மாறியிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்

சென்னை: அதிமுக அரசு, கரோனா தடுப்பில் முழுமையான அக்கறை காட்டவில்லை என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

duraimurugan
duraimurugan

By

Published : Apr 13, 2020, 12:26 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ப்ளாக் காமெடி எனப்படும் கொடூர தமாஷ் பேர்வழிகளாக மாறியிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு திமுகதான் காரணம் என்று பச்சைப் பொய்யை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துவிட்டுள்ள அதிகாரப்பூர்வமற்ற முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் முதலமைச்சரிடமும் பதில் இல்லை; அமைச்சரிடமும் பதில் இல்லை. நோயைக் கண்டுபிடிக்கவே உபகரணம் இல்லை. ஆனால், போர்க்கால நடவடிக்கையில் அரசு செயல்படுகிறது என்பது நல்ல வேடிக்கை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் அதிமுக அரசு எப்படி விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அது காட்டுகிறது. அதிமுக அரசு, கரோனா தடுப்பில் முழுமையான அக்கறை காட்டவில்லை.

அதிமுக அரசின் தோல்வியைத் திசை திருப்ப அமைச்சர் ஜெயக்குமார் திமுக மீது பழி போடுவது அழகல்ல. அமைச்சரின் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற அசிங்கம் இது என்று கூறிட விழைகிறேன்.

மக்களுக்கு உண்மை தெரியவருகிறது என்பதாலும், தன்னைவிட தனது அமைச்சரவை சகாவுக்கு ஊடக ஒளிபரப்புகள் மூலம் மக்களிடம் விளம்பரம் கிடைக்கிறது என்பதாலும் துறையின் அமைச்சரையே ஓரங்கட்டிவிட்டு, தனது விளம்பரத் தூதுவராக தலைமைச் செயலரை முதலமைச்சர் முன்னிறுத்தியிருப்பதை, ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி செய்திகளைக் கவனிக்கும் அனைத்து மக்களும் அறிந்துகொண்டார்கள். இந்த நேரத்திலும் இப்படி ஒரு மோசமான அரசியல் கண்ணோட்டமா என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆந்திராவில் 420 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details