தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவின் திராவிட மாடல் அரசு சிறப்பாக உள்ளது.. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு - திமுகவின் திராவிட மாடல் அரசு சிறப்பாக உள்ளது

திமுகவின் திராவிட மாடல் அரசு சிறப்பாக உள்ளது என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

திமுகவின் திராவிட மாடல் அரசு சிறப்பாக உள்ளது..
திமுகவின் திராவிட மாடல் அரசு சிறப்பாக உள்ளது..

By

Published : Aug 15, 2022, 4:04 PM IST

Updated : Aug 15, 2022, 8:11 PM IST

76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் 76 வது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இதில் தகைசால் தமிழர் விருதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு முதலமைச்சர் வழங்கினார்.

நம்மிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, எனக்கு அளிக்கப்பட்ட பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாயுடன் 5000 ரூபாய் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி மிக சிறப்பாக, பிரமாண்டமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்து இருக்கிறது. திமுகவின் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக உள்ளது. மாநில சுய ஆட்சியை பெற்று தந்தது. மாநில சுய ஆட்சியில், இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்தார்.

திமுகவின் திராவிட மாடல் அரசு சிறப்பாக உள்ளது..

இந்த விருது தற்போது எங்களுக்கு கிடைத்தது மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது, மென்மேலும் பணியில் சிறக்க இவ்விருது உதவும் என
விருத்தாளர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்.

*விருத்தாளர்கள் பெயர்கள்*

*முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்*

ஆண்கள் பிரிவு

* முகமது ஆசிக் நீலகிரி மாவட்டம்,

* பெண்கள் பிரிவு

ச. சிவரஞ்சனி நாகப்பட்டினம் மாவட்டம்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது

*சிறந்த சமூகப் பணியாளர் சு. அமுத சாந்தி, மதுரை

*துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா பா. எழிலரசி, நாகை

இதையும் படிங்க:திருப்பத்தூரில் கோலக்கலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா

Last Updated : Aug 15, 2022, 8:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details