தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Etv Bharatதிமுக ஆலோசனை கூட்டம் - மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
Etv Bharatதிமுக ஆலோசனை கூட்டம் - மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

By

Published : Dec 1, 2022, 10:50 AM IST

சென்னை : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு பின்னர் புதிதாக பொறுப்பேற்ற, நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளருடன் நடைபெறும் முதல் கூட்டம் ஆகும்.

மறைந்த திமுக பொது செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அரசு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை திறக்கப்பட்டு அவ்வளாகம் பேராசிரியர் க.அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டங்கள், மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கருத்தரங்கங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளன.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகளை அமைக்கும் பணியை தொடங்கியுள்ள திமுக நாடாளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு அறிவுரைகளையும், கட்டளைகளையும் நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details