திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக பொருளாளர் துரைமுருகன், துணை. பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ. பெரியசாமி, வி.பி. துரைசாமி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சேலம், திருச்சி, நாமக்கல், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவியில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், திமுக கட்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.