தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மங்களகரமான கோலத்தை அலங்கோலப்படுத்தும் திமுக - அமைச்சர் குற்றச்சாட்டு - Minister Pandiyarajan meets press meet

சென்னை: கோலம் என்பது மங்களத்தின் அடையாளம் அதை எதிர்ப்பின் அடையாளமாக திமுக மாற்ற முயற்சித்தும் அவை சரியாக சென்றடையவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் குற்றம்சாட்டினார்.

minister pandiayarajan
minister pandiayarajan

By

Published : Dec 31, 2019, 5:27 PM IST

சென்னை ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கனிமொழி அறிக்கை விட்டும் அனைத்து இடங்களிலும் 10 விழுக்காடு வீடுகளில்கூட கோலம் போடவில்லை. 2 விழுக்காடு வீடுகளில் மட்டும்தான் கோலம் போடப்பட்டுள்ளது . இது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

திமுகவை சாடி பேசிய அமைச்சர் பாண்டியராஜன்

திமுகவை சாடி பேசிய அமைச்சர் பாண்டியராஜன்

இதுபோல், எதிர்ப்பை சொல்வதை யாரும் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். இதேபோல் CAA, NRC-யால் கைதானவர்கள் மொத்தம் 8000 பேர்தான். ஆனால், 2 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். கைதாகி வெளியே வந்து பிறகு CAB, NRCயை எதிர்க்கும் நபர்கள் 8,000 பேர்தான். இது ஒன்றும் பெரிய எண்ணிக்கை கிடையாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 12 கட்சிகள் இணைந்து நடத்திய ஒரு பேரணியில் மொத்தமே 8,000 பேர் இருந்தனர். இது ஒன்றும் தவறான சட்டம் அல்ல. இதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது தேவையற்ற பயத்தை கிளப்பிவிடக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கிறேன்.

கோலம் என்பது மங்களத்தின் அடையாளம். அதை எதிர்ப்பின் அடையாளமாக திமுக மாற்றுவது முறையானதல்ல" என்றார்.

இதையும் படிங்க: 'வாழ்வில் வசந்தம் மலரட்டும்' - முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details