சென்னை: மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஜனவரி மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று காலை துவங்கியது. 64 தீர்மானங்களை நிறைவேற்றுவது சம்பந்தமாக நடைபெற்ற இந்த கூட்டம் காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதில் நேரம் இல்லா நேரம் முடியும் இறுதி நேரத்தில் திமுக உறுப்பினர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 14வது வார்டு கவுன்சிலர் பானுமதி அவரது இருக்கையில் திடீரென மயங்கி சரிந்தார்.