தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திமுக புகார் மனு!

சென்னை: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி காவல்துறை இயக்குநரிடம் திமுக மனு அளித்துள்ளது.

Dmk complaint against minister rajendra balaji

By

Published : Nov 18, 2019, 8:51 PM IST

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் காவல்துறை இயக்குநரைச் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார் என குற்றஞ்சாட்டினார்.

தற்போதுவரை, இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யாததால் டிஜிபியை சந்தித்ததாகவும், அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டதாகவும் கூறினார்.

ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

இதையும் படிங்க:''திமுகவினரின் சட்டையை கிழிங்க, வீட்டு கதவை உடைங்க" - அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details