திமுக தலைவர்கள், நிர்வாகிகள் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் தயாரித்து தவறான செய்திகளை பரப்புகின்றனர் என்றும், இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திமுக சட்டப் பிரிவு சார்பில் கிரிராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன், "சென்னை மாநகரக் காவல் ஆணையரை திமுக சார்பில் சந்தித்து புகார் அளித்துள்ளேன். பேரறிஞர் அண்ணா, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தில் குமார் எம்.பி ஆகியோர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி, திமுக கொள்கைக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் திமுக குறித்து அவதூறு : புகார் அளித்த கட்சியினர் - திமுக குறித்து அவதூறு
சென்னை: சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி திமுக குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கkகோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திமுக புகார்
இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு படி புகார் கொடுத்துள்ளோம். சமுதாயத்தில் மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ள இந்த போலி ட்விட்டர் கணக்குகளை தடை செய்ய வேண்டும்.
தற்போது வரை ஐந்து போலி ட்விட்டர் கணக்குகள் குறித்த ஆவணங்களை சமர்பித்துள்ளோம். மேலும் தகவல்களை சேகரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க :எனக்கு கரோனா தொற்று இல்லை - வி.பி. கலைராஜன் விளக்கம்!