ஐஎன்சி (INC) என்ற நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ’கியூப் இன் ஸ்பேஸ்’ என்ற போட்டியை முன்னதாக நடத்தியது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள், நாசா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டுக்கான இந்தப் போட்டியில் கரூர் மாணவர்கள் உருவாக்கியுள்ள செயற்கைகோள் தேர்வாகியுள்ளது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான அட்னன், கேசவன், அருண் ஆகியோர், அறிவியல் மீது ஏற்பட்ட தீரா காதல் காரணமாக இந்தப் புதிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். வலுவூட்டப்பட்ட ’கிராபோன் பாலிமர்’ என்ற மூலப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோளுக்கு ’இந்தியன் சார்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.