தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்! - chennai district news
20:58 May 07
தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(மே.7) முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி. செழியன் அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திராவிடம் என்ற சொல்லே சமூக நீதிக்கான மாற்று சொல்: சுப. வீரபாண்டியன்