சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இருக்கும் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:காவிரி வரலாறு தெரியாமல் பேசும் ஒன்றிய அமைச்சர் - துரைமுருகன் காட்டம்!
இந்த அமைதி பேரணியில், சென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 146-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்முகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
கவுன்சிலர் சண்முகம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனையடுத்து கவுன்சிலர் சண்முகம் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்ற மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறைந்த மாநாகராட்சி உறுப்பினர் சண்முகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தற்போது அவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: கருணாநிதி நினைவு தினம்: "தூரிகையாக மாறிய வாசகம்" - ஓவியர் செல்வம் அசத்தல்!