தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு - கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ வெற்றியை ரத்து செய்

சென்னை: கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோக்குமாரின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

MHC
MHC

By

Published : Jul 1, 2021, 8:53 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் அசோக்குமார், தி.மு.க., சார்பில் செங்குட்டுவன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், 794 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த அசோக் குமார் வெற்றி பெற்றார்.

தபால் வாக்கு எண்ணாமல் நிரகரிப்பு

அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "வாக்கு எண்ணிக்கையின் போது அசோக்குமார் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 605 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அலுவலர் நிராகரித்துவிட்டார்.இது சட்ட விரோதமாகும்.

வாக்காளர்களுக்கு பணம்

மேலும், வேட்புமனுவில் தன்னுடைய நிலம் தொடர்பான தகவலை அசோக்குமார் மறைத்துள்ளார். ஆனாலும், வேட்புமனுவை தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொண்டார். இது, சட்டப்படி ஏற்புடையது அல்ல. அதுமட்டுமல்ல, ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தேர்தலில் செலவு செய்துள்ளார். எனவே முறைகேடாக பெற்ற அசோக்குமாரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் வெற்றி: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details