சென்னை :பொங்கல் பரிசுத் தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, ஜனவரி 4ஆம் தேதி முதல் பரிசுத் தொகையைப் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த டோக்கனில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுகவின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் இந்தப் பொங்கல் பரிசுத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் அதிமுகவினர் சுய விளம்பரம் தேடிக்கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.