கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு, மருந்து ஆகிய உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் தனித்தனியே மனு தாக்கல்செய்யப்பட்டன.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தாக்கல்செய்த பதில் மனுவில், தமிழ்நாட்டில கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின்கீழ், பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதற்கு ஒட்டுமொத்தமாக தடை ஏதும் விதிக்கப்படவில்லை எனவும், நிவாரண உதவிகள் வழங்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.