தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 தொகுதிகளுக்கான வேட்பாளர் யார்..? நேர்காணல் தேதியை அறிவித்த திமுக!

சென்னை: திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களிடம் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக

By

Published : Mar 7, 2019, 4:54 PM IST

திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐஜேகே, ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைந்துள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுபெற்றது.

திமுக 20 தொகுதிகளிலும், மீதமுள்ள 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளதாக நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களுக்கு வரும் 9, 10 தேதிகளில் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த நேர்காணலில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details