தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளர் பேட்டியிட உள்ளார்: முதலமைச்சர் நாராயணசாமி

சென்னை: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் நிற்கவுள்ளார் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 14, 2019, 11:54 PM IST

Pudhucherry CM Narayanasamy

திமுக தலைவர் ஸ்டாலினை புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மரியதை நிமித்தமாக இன்று சந்தித்துப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக கூட்டணியில் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்பது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல், தட்டாஞ்சாவடி தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிக்கும் இடைதேர்தல் வருகிறது.

அந்த தொகுதியை பொறுத்தவரை திமுக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் கேட்டுக் கொள்வோம் தயார் என கூறினோம். அதன்படி, அங்கு திமுக வேட்பாளர் நிற்பார் என்ற முடிவு எடுத்துள்ளனர். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். அனைத்துக் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் பணி புரிவோம்.

எங்கள் கூட்டணி பலமான கொள்கை கூட்டணி. ஆனால் அதிமுக கூட்டணி சந்தர்பவாத கூட்டணி.

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிக்கு பதில் அளித்தது தமிழகத்தில் பேசும் பொருளாக உள்ளது.

அதுபோல் நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆற்றி உரை மிக தெளிவாக ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்று கூறினார்.அதே மேடையில், தமிழகக்த்தில் ஸ்டாலின் வருவார் என்று ராகுல் காந்தியும் கூறியுள்ளார். அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்து கூட்டணியாகும்.

ABOUT THE AUTHOR

...view details