மாநிலங்களவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மார்ச் 26ஆம் தேதி மாநிலங்களைவக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 6ஆம் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சீனிவாசனிடம் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவைத் தேர்தல் - திமுகவினர் வேட்புமனு தாக்கல் மாநிலங்களவை தேர்தல் அட்டவணை
- மார்ச் 3ஆம் தேதி - வேட்புமனு தாக்கல் தொடக்கம்
- மார்ச் 13ஆம் தேதி - வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
- மார்ச் 16ஆம் தேதி - வேட்புமனு பரிசீலனை
- மார்ச் 26ஆம் தேதி - வாக்குப்பதிவு
இதையும் படிங்க: மாநிலங்களவை மார்ச் 11ஆம் தேதி வரை ஒத்திவைப்பு