2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீசை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தி வழக்கு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி ரத்து செய்தது.
இதையடுத்து மீண்டும் கூடிய உரிமைக்குழு, இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு குறித்து பேரவைச் செயலர், உரிமைக்குழு மற்றும் அதன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், இரண்டாவது நோட்டீசை எதிர்த்து திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க. செல்வம் தொடர்ந்த வழக்கும், இடைக்கால தடையை நீக்கக் கோரி உரிமைக்குழு, பேரவைச் செயலர் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளும், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது கு.க. செல்வத்திற்கு எதிரான நோட்டீசுக்கும் நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இரண்டாவது நோட்டீஸை எதிர்த்த வழக்குகள், அவற்றில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்குகளின் இறுதி விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
குட்கா விவகாரம்: டிச. 2இல் இறுதி விசாரணை! - Dmk brought gutka sketches in assembly
சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுசென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 2ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
![குட்கா விவகாரம்: டிச. 2இல் இறுதி விசாரணை! dmk gutka issue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9489156-thumbnail-3x2-hda.jpg)
dmk gutka issue