சென்னை காசிமேட்டில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் திமுக சார்பில் மீனவர் சமுதாய மக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, "திமுகவினர் மீது போடப்பட்ட எந்தவொரு ஊழல் வழக்கும் நிரூபிக்கப்படவில்லை, யாருக்கும் தண்டனையும் வழங்கப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா மீது அரசியல் சட்டத்தை படுகொலை செய்த மன்னிக்க முடியாத ஊழல்வாதி என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.