தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2020, 9:15 PM IST

ETV Bharat / state

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

சென்னை: மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இன்று போராட்டம் நடத்தின.

TN against New Farm Act  dmk farm act protest
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடுமுழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன. இதையொட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற போராட்டம்

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் 28 இடங்களில் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது, இச்சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று விளக்கும் வகையில் நாடகம் நிகழ்த்தப்பட்டது.ஈரோடு மணல்மேட்டிலுள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சு. முத்துச்சாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஈரோட்டில் போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட் நாடகம்

கோவை: கருமத்தம்பட்டி நால்ரோட்டில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளர் நித்யா மனோகரன் தலைமயைல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் திருத்தச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. மேலும், சட்டம் திரும்பப் பெறும்வரை திமுக தலைமையில் போராட்டம் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் நடைபெற்ற போராட்டம்

பொள்ளாச்சி கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பாளையத்தில் வேளாண் திருத்தச்சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வேளாண் திருத்தச் சட்டங்கள் திரும்பப் பெறவிட்டால் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினர் தெரிவித்தனர். நெகமம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சபரி கார்த்திகேயன் தலைமையிலும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரண்மனை முன்பாக திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா(எ) முத்துராமலிங்கம் தலமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நாவஸ்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் ஏர்கலப்பையுடன் கலந்துகொண்டு புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து முழக்கமிட்டனர்.

போராட்டத்தில் ஏர்கலப்பையுடன் கலந்துகொண்ட விவசாயிகள்

கரூர்: புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாக 32 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கரூர்- வாங்கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக பொறுப்பாளாருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

செந்தில் பாலாஜி தலைமையில் கரூரில் நடைபெற்ற போராட்டம்

சேலம்:சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்தோர் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சேலத்தில் நடைபெற்ற போராட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித சட்டமானாலும் எதிர்க்கக்கூடிய இடத்தில், திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளுமே உள்ளன என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details