தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக, காங்கிரஸ் உருவாக்குகிறது’ - பொன். ராதாகிருஷ்ணன் - DMK and Congress are creating an environment people are not safe

சென்னை: மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்படுத்துவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

pon-radhakrishnan
pon-radhakrishnan

By

Published : Dec 30, 2019, 8:29 AM IST

சென்னை அடையாறில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன. வேண்டுமென்றே இந்து, இஸ்லாமியர்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர். பேருந்து, ரயில்களை எரித்துதான் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்து தெரிவிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

அஸ்ஸாமில் இருக்கக்கூடிய பிரச்னைகள் வேறு, இலங்கை தமிழர்களுடைய பிரச்னைகள் வேறு. எல்லாவற்றையும் சேர்த்து முடிச்சு போடப் பார்க்கிறார்கள். மேலும் நமது நாட்டில் இரட்டைக்குடியுரிமை கொடுப்பதற்கான உரிமை இருக்கிறதா என்று எனக்கே தெரியாது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பொறாமைத் தீயில் வெந்துபோயிருக்கிறார் மு.க. ஸ்டாலின்...!'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details