தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரணம்: திமுக சார்பில் ஒரு கோடி நிதி - கரோனா நிவாரணம்: திமுக சார்பில் ஒரு கோடி நிதி

சென்னை: கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DMK allocate One crore fund for Corona Relief
DMK allocate One crore fund for Corona Relief

By

Published : Mar 30, 2020, 12:23 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தங்களாலான நிதி உதவிகளை அளிக்குமாறு பிரதமர் மோடியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கான நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், திமுகவின் சார்பாக கரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

மேலும், தமிழ்நாட்டில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும், மக்கள் தேவைகள் குறித்தும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களிடம், மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க:கரோனா: ஏழைகளுக்கான நிவாரணம் எங்கே... காங்கிரஸ் கேள்வி?

ABOUT THE AUTHOR

...view details