சாத்தியமானது எப்படி?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, திமுக தனிப்பெரும் ஆளும் கட்சியாகப் பதவிக்கு வந்துள்ளது. வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி , சிறுபான்மையினர் வாக்குகள் பெரிய அளவில் கைகொடுத்தது தெரியவந்துள்ளது.
வடமாவட்டங்களில் பலத்தை நிரூபித்த திமுக அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, புரட்சி பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் வன்னியர் வாக்குகள் (54%) கை கொடுத்தப் போதிலும், 10 இல் 4 வாக்குகள் திமுகவிற்கு கிடைத்துள்ளது. திமுக கூட்டணிக்குப் பட்டியலின வாக்குகள் பெரியளவில் வெற்றிக்கு உதவியுள்ளது.
அதிமுக கூட்டணி கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு வன்னியருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, பல்வேறு சலுகைகள் அறிவித்த நிலையிலும் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் தர்மபுரி, பென்னாகரம், மயிலம், மேட்டூர் ,சேலம் மேற்கு என, 5 தொகுதிகளில் போராடி வெற்றி பெற்றுள்ளது.
வன்னியர், முதலியார் வாக்குகள் (54%) அதிமுக கூட்டணி வெற்றி பெற காரணியாக அமைந்தது. கொங்கு மண்டலத்தில் கொங்கு சமுதாய வாக்குகள் (59%) மொத்தமாக கிடைத்தது தான் அதிமுக எதிர்கட்சியாக அமையவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. அதே போல் அதிமுக கூட்டணிக்கு 18 இடங்கள் தென்மாவட்டங்களிலும், 30 இடங்கள் கொங்கு மண்டலத்திலும் கிடைத்துள்ளது.
வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் உதவியுடன் சில இடங்களை கைப்பற்றியது. தர்மபுரி (5), கோவை மாவட்டங்களில் மொத்த இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அதே நேரம், சென்னை மண்டலத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றியை பெற முடியவில்லை. திமுக கூட்டணிக்கு அருந்ததியர் சமுதாய வாக்குகள் (69%) பெரியளவில் கைகொடுத்தது.
தென்மாவட்டம்
திமுக கூட்டணி பெரும்பான்மை பெற தென் மாவட்டங்கள் பெரிய அளவில் உதவியுள்ளது. திண்டுக்கல்(4), மதுரை(5), தேனி(3), விருதுநகர்(7), கன்னியாகுமரி(4), தூத்துக்குடி(5) என, அனைத்து இடங்களிலும் பெரியளவில் வெற்றிபெற்றது. குறிப்பாக, நாடார்(50%), கிறிஸ்தவர்கள்(56%), தேவேந்திர குல வேளாளர்கள்(50%), இஸ்லாமியர்கள் (69%)வாக்குகள் பெரியளவில் கை கொடுத்துள்ளன.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தென் மாவட்டங்கள் எப்போதும் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பது வழக்கம். ஆனால், இந்த முறை போதிய வெற்றியை பெற முடியவில்லை. அதிமுக அரசின் அமைச்சரவையில் நாடார் சமுதாயத்திற்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது, சாத்தான்குளம் பிரச்சனை, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு உள்ளிட்ட பிரச்சனைகளும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினருக்குப் பட்டியலின வெளியேற்ற கோரிக்கையினாலும் எதிர்பார்த்த வாக்குகள் அதிமுகவிற்கு கிடைக்காதது பெரிய பின்னடைவாக அமைந்தது.
வடமாவட்டங்களில் அதிமுக தோல்வி சென்னை திமுக கோட்டை
அனைத்து தரப்பினரும் வசிக்கும் சென்னையில், திமுக, அதன் கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்தமுறை 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக இம்முறை 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளது; நகர்புற வாக்குகள் திமுக கூட்டணிக்கு விழுவது தான் வழக்கம்; மெஜாரிட்டி வெற்றியை பெற சென்னை மண்டலம் பெரிய அளவில் உதவியுள்ளது; உயர்தர மக்களின் வாக்குகள்(47%) இந்த முறை திமுக கூட்டணிக்கு கிடைத்து உள்ளது; திமுக இந்து விரோதக் கட்சி என்ற பரப்புரை எடுபடாததால், கோயில் நகரங்களில் அனைத்திலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.