தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சியாக கருதக்கூடாது - வழக்கு தள்ளுபடி - mhc dismissed case

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் எட்டு பேரை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாதென தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Sep 2, 2021, 5:21 PM IST

சென்னை:நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமி நாதன், சதன் திருமலை குமார், ராகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது என உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜனநாயாகத்தை கேலி கூத்தாக்கும் செயல்

அந்த மனுவில், "திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களையும் எப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருத முடியும் என்றும் இது ஜனநாயாகத்தை கேலி கூத்தாக்கும் செயல்.

சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளை சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது. இந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை எதிர்க்கட்சியாக கருதி பேரவையில் தனி இருக்கை வழங்க கூடாது. சட்டப்பேரவையில் பேச தனியாக நேரம் ஒதுக்கக் கூடாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சபாநாயகருக்கே அதிகாரம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது சபாநாயகரின் அதிகாரத்துக்குள்பட்டது, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதில் எந்த பொது நலனும் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள்: நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details