மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து காஷ்மீர் பிரச்னை பற்றிய அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமையில் நடைபெற்றது . கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் " இக்கூட்டத்தில் காஷ்மீரில் நிலவும் பிரச்னை குறித்து முழுமையாக அலசி ஆராயப்பட்டது.
காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் அனைத்துக்கட்சி தீர்மானம் - kashmir issue
சென்னை: எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஓர் குழுவை அமைத்து காஷ்மீருக்கு அனுப்பி அங்குள்ள உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
mk stalin all party meeting
அதன்படி மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஓர் குழுவை அமைத்து காஷ்மீருக்கு அனுப்பி அங்குள்ள மக்களோடு கலந்துரையாடி உண்மை நிலவரத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்திட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடந்து அதனை கண்காணித்து இது போல் மீண்டும் ஓர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் என முடிவு செய்யப்பட்டுள்ளது " என்றார்.