சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட தண்டையார்பேட்டை இசிஐ மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நேற்று அம்மையங்களில் மாலை நேரத்தில் ஓட்டுப்பதிவு மிகவும் மந்தமாகவே காணப்பட்டது.
அப்போது சுயேட்சை வேட்பாளர் போத்தி ராஜன் என்பவர் வாக்குச்சாவடி மையத்திற்குள் நீண்ட நேரமாக சுற்றிக்கொண்டிருந்ததால் திமுகவைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வெளியே செல்லும்படியும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர் போத்திராஜனை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். வெளியே வந்ததும் திமுகவைச் சேர்ந்த சிலர் போத்திராஜனுடன் வாக்குவாதம் செய்து விரட்டினர். சிறிது நேரத்திற்கு பிறகு போத்திராஜன் அதிமுகவைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்து திமுகவைச் சேர்ந்வர்களுடன் வாக்குவாதத்திலும் மோதலில் ஈடுபட முயன்றதால் பதட்டமான சூழல் உருவானது.