சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அடையாறை சேர்ந்த ரம்யா இளவரசன் தனது கணவரும் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமார் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், எனது கணவர் சாரதி குமார் ,அவரைவிட 14 வயது மூத்த பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார். அவருடன் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்துகிறார். பள்ளியில் படிக்கும்போதே சாரதி குமார் என்னை விரும்பினார். அதன் பின்பு கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் ஆனதிலிருந்து வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கம் காட்டி வந்தார். எங்கு சென்றாலும் அந்த பெண்ணை அவருடன் அழைத்து வந்தார். நான் மகப்பேறு காலத்தில் தாய் வீட்டிற்கு சென்றிருந்தபோது அந்த பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணுடைய அக்கா மகளான 18 வயது உடைய பெண்ணுடனும் நெருக்கமாக இருக்கிரார்.
திமுக நகர செயலாளர் மீது மனைவி புகார் - complaint against dmk
சென்னை: வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமார் மீது அவரது மனைவி புகாரளித்துள்ளார்.
எனது கணவரின் செயல் குறித்து கட்சித் தலைவரான ஸ்டாலினிடம் கடந்த வாரத்தில் அண்ணா அறிவாலயம் வந்து புகார் அளித்தேன். அப்போது அங்கு வைத்து சாரதி குமார் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் என்னுடைய நகைகள், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு என்னையும், குழந்தையையும், என் குடும்பத்தையும் மிரட்டுகிறார் என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து வாணியம்பாடி நகர செயலாளர் சாரதி குமாரிடம் பேசியபோது, ”எனக்கும் எனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால் நிறைய பணம் பெறுவதற்காகவே அவர் இவ்வாறான குற்றச்சாட்டை அவர் கூறிவருகிறார். மேலும் ரம்யா காண்பித்துள்ள புகைப்படங்கள் ஏற்கனவே வாணியம்பாடியில் உள்ள சில பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இது தொடர்பாக ரம்யா மீது மானநஷ்ட வழக்கும் தொடுத்திருக்கிறேன். மேலும் நான் கட்சியில் நல்ல பொறுப்பில் செல்வாக்குடன் இருப்பதால் என்னை பழிவாங்கும் நோக்குடன் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என் மீது எந்த காவல் நிலையத்தில் எந்த வழக்கும் இல்லை. நான் இதுவரை ரம்யா மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை. என்னுடன் இருக்கும் பெண் எனக்கு சகோதரி போன்றவர் அவரைப் பற்றி ரம்யா தவறான தகவலை அளித்து வருகிறார்” என்றார்.