தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை அவர்களின் கூட்டணி போல் தெளிவில்லாமல் உள்ளது - கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யம்

சென்னை: திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை அவர்களின் கூட்டணி போல் தெளிவில்லாமல் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன்

By

Published : Mar 20, 2019, 7:24 AM IST

தமிழ்நாட்டில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி-இந்திய குடியரசு கட்சி கூட்டணிஅமைத்துள்ளதாக, இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் சே.கு.தமிழரசன் அறிவித்தார்.

பின்னர், இதுகுறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்:

இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு தமிழரசன் எங்களுடன் கூட்டணிக்கு வந்துள்ளார் அவரை அன்புடன் வரவேற்கிறோம்.

எங்களின் தேர்தல் அறிக்கையோடு மற்ற கட்சிகளின் அறிக்கையை வைத்துப் பாருங்கள் உங்களுக்கே மாறுபாடு தெரியும். மூன்றாவது அணி வாய்ப்பை இந்திய மக்கள் ஏற்படுத்த வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவாலை எங்களின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அவர் முதலமைச்சர் என்பதால் நேரம் கிடைக்கும்போது வருவார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட குமரவேல் என் மீது குற்றச்சாட்டினை வைக்கவில்லை. கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை 50 வருடமாகச் சொல்லி வருகிறார்கள். இந்த இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கை அவர்களின் கூட்டணி போல் தெளிவில்லாமல் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், நீங்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்கு, உங்களின் ஆசைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

ABOUT THE AUTHOR

...view details