சென்னை ஆர்.கே. நகர் தொகுதி திமுக வேட்பாளர் எபினேசர் காசிமேட்டில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
அதிமுகவினர் பரப்புரை செய்கிறார்கள்: திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு - etv news
’வாக்குச்சாவடி மையத்திலேயே அதிமுக பரப்புரை செய்து வருவதாக திமுக வேட்பாளர் எபினேசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவினர் பரப்புரைச் செய்து வருவதாக திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வாக்குச்சாவடி மையத்திலேயே அதிமுகவினர் பரப்புரை செய்கிறார்கள். இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமரும் வசதி முறையாக ஏற்படுத்தப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் இந்தத் தொகுதியில் திருப்தியாக இல்லை” என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 2ஆம் கட்ட வாக்கு நிலவரம் குறித்து சத்யபிரத சாகு செய்தியாளர் சந்திப்பு!